ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி
ஈரானுடனான போர் காரணமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஆகிய இருவருக்கும் 'பயங்கரவாத' அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை வழங்கி வந்த அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவி விலகியுள்ளார்.
நடைபெற்று வரும் போரை தனது மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது என தனது ராஜினாமா கடிதத்தில் ஜோ கென்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவுக் குழுவின் அழுத்தம்
மேலும், ‘ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை, மேலும் இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் கடந்தகால கூற்றுகளையும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வெள்ளை மாளிகை ஜோ கென்ட் ராஜிநாமா தொடர்பாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்கச் சட்டத்தின்படி, அந்நாட்டு ஜனாதிபதி ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால், நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும்.
ஒரு தாக்குதல் 'உடனடியாக' நடக்கப்போகிறது என்ற சூழலில் மட்டுமே அதிபர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் உண்டு. அமெரிக்கா ஈரான் தங்கள்மீது தாக்குதல் நடத்த உள்ளதாக கூறி போரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.