விடுதியில் கொலுசுச் சத்தம்; அமானுஸ்ய அச்சத்தில் வெளியேறிய 600 மாணவர்கள்!
இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் சுமார் 600 மாணவர்கள் பயத்தில் அவர்களின் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இச்சம்பவம் அமராவதி (Amravati) நகரில் அரசாங்கம் வழிநடத்திய மாணவர் தங்கும் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவம் என்ற வதந்தி பரவத் தொடங்கியதை அடுத்து மாணவர்கள் தங்களின் வீட்டிற்குத் திரும்பியதாகச் ஊடகங்கள் தெரிவித்தன.

கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம்
கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம் கேட்டதாக சில மாணவிகள் கூறியதை அடுத்து விடுதியில் தங்க்கிருந்த மாணவர்கள் மத்தியில் பயத்தைக் கிளறியது. ஆறு மாணவிகள் கட்டுப்படுத்தமுடியாமல் மாறி மாறி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததாகக் கூறப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மனநல நிபுணரை வரவழைத்து அந்த மாணவிகளைச் சோதனைக்கு உட்படுத்தினார். அவர்கள் Dissociative Conversion Disorder எனப்படும் மனநல நோயால் அவதிப்படுவதாக மருத்துவச் சோதனை மூலம் தெரியவந்தது.
அதீத மனவுளைச்சலால் மனோவியல் ரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.