ஊரையே அலறவிட்ட மந்திரவாதி ; நேரில் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக்,பயந்து நடுங்கும் கிராமம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாந்திரீகம் செய்து நரபலி கொடுத்திருப்பதாக ஊர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளத்தூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களில், வயதானவர்கள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர். இதனால் கிராமத்தில் கெட்ட சக்தி நடமாடுவதாகவும், வருங்காலத்தில் பெரிதாக எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்திலும் மக்கள் அச்சத்தில் கிடக்கின்றனர்.
நரபலி பூஜை
இதற்கெல்லாம் ஊருக்குள் இருக்கும் ராஜா என்பவர்தான் காரணம் எனவும் சிலர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். காரணம், ராஜா ஒரு மாந்தீரிக வாதி என சொல்லிக்கொண்டு "பில்லி சூனியம் எடுப்பேன், பேய் ஓட்டுவேன்" எனவும் பூஜை செய்து வந்துள்ளார்.
பெரிய பிரச்சினை என்று சொல்லிக்கொண்டு ராஜாவைப் பார்க்க வரும் சிலரிடம், "நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்" என அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ராஜா என்றாலே ஊருக்குள் அல்லுதான். கண் எதிரே அவர் வந்தால் கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டோம் எனச் சிலர் பேயரண்ட பீதியில் நடுநடுங்கியபடியே பேசுகின்றனர்.
இந்நிலையில், ஊருக்கு கிழக்கே உள்ள ஒதுக்குப்புறமான தென்னந்தோப்பு கரையில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. 5 நாட்களை கடந்தும் துர்நாற்றம் வீசியதால் நரபலியாக இருக்குமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே பள்ளத்தூரில் கிராமத்தில் குவிந்த பொலிஸார் குற்றம்சாட்டப்பட்ட ராஜாவை வரவழைத்து துர்நாற்றம் வீசிய இடத்தில் ஆட்களை வைத்துக் குழிதோண்டினர். அப்போது பேரதிர்ச்சியாக பன்றி ஒன்றை கொன்று குங்குமம் மஞ்சள் பூசி பூஜை நடத்தி புதைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பார்த்து கிராம மக்கள் மட்டுமல்லாது பொலிஸாருக்கும் ஷாக் ஆகியுள்ளனர். பின்னர் தோண்டிய குழியை மூடிவிட்டு பில்லி சூனியம் எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ராஜாவை காவல்நிலையம் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் முடிவிலேயே பன்றியை கொன்று பூஜை செய்தது யார்? எதாவது சதிதிட்டம் தீட்டியுள்ளார்களா ? என்பது குறித்தும் தெரியவரும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றம் நிலவி வருகிறது.