மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் குடும்பத் தகராறு
புவக்பிட்டிய, அஸ்வத்த வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துஷான் ரங்கன மாயாதுன்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
மருமகன் மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த, குறித்த நபர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மாமனார், கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.