தமிழக அரசியலில் பரபரப்பு; திமுகவுடன் கைகோர்க்கும் பிரேமலதா விஜய்காந்! கேப்டனின் ஆன்மா மன்னிக்காது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்காந்தின் தேமுதிக கட்சி இணைந்துள்ளமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார்.

10 ஆண்டுகளுக்குப் பின் பலித்த கலைஞர் கூற்று
இந்நிலையில் கலைஞர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா சந்தித்துள்ளார்.
இதுவரை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டுவந்த தேமுதிக, முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டிருந்தார். பிறகு, 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார்.
திமுக- தேமுதிக கூட்டணியை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது
பிறகு, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் போனது தேமுதிக. 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டிருந்தது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் முதல் முறையாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதேவேளை தனது வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த் என்றும் திமுகவுடனான தேமுதிக கூட்டணியை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்றும் தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது