நீர்வெறுப்பு நோய் ; பூனை பிரியர்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள்
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன இது தொடர்பில் கூறுகையில்,
நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள் போன்ற விலங்குகள் கடிப்பதன் மூலம் பரவும் நீர்வெறுப்பு நோயானது ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது.
சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதற்கமைய, நாட்டில் வருடமொன்றுக்கு 250,000 முதல் 300,000 வரையான நாய் கடி சம்பவங்கள் மாத்திரம் பதிவாகின்றன.