திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்; பெண்கள் பலர் பலி
பாகிஸ்தானில் திருமணதிற்காக 100 பேர் சென்ற படகு கவிழ்ந்து 19 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 30 ற்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்தவர்கள் ராஜன் பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேளையிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தோஸ் ஆற்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் பயணித்து கொண்டிருந்த படகு எதிர் பாரத விதமாக ஆற்றில் கவிழ்ந்து இந்த படகில் பயணித்த 100 பெரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்தில விரைந்த பொலிஸார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பு குழுவினரால் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்ததோடு அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதிகளவான மக்களை படகில் ஏற்றியது நீரின் ஓட்டம் அதிகரித்தமையே இந்த விபத்தின் காரணம் ஆக இருக்கலாம் என முதற் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.