புதிய அரசமைப்பு பொறிமுறை ஜனவரியில் ஆரம்பம் ; சுமந்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு

Anura Kumara Dissanayaka M. A. Sumanthiran Sri Lanka
By Sahana Nov 19, 2025 10:40 PM GMT
Report

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என்று இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பொலிஸாரின் பணி இடைநீக்கம் குறித்து வலியுறுத்தும் எதிர்க்கட்சி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பொலிஸாரின் பணி இடைநீக்கம் குறித்து வலியுறுத்தும் எதிர்க்கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

அதன் பின்னர் அந்தச் சந்திப்புக் குறித்து தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு,

புதிய அரசமைப்பு பொறிமுறை ஜனவரியில் ஆரம்பம் ; சுமந்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு | Solution Finding Mechanism Will Begin President

"ஜனாதிபதி பதவி ஏற்று, அதன் பின்னர் அவரது அரசும் அதிகாரத்துக்கு வந்து, ஒரு வருடத்தின் பின்னர்தான் இப்போது இந்தச் சந்திப்பு இடம்பெற்று இருக்கின்றது.

அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாகக் கூறிய விடயம் புதிய அரசமைப்பு ஒன்று வரும் என்பதாகும். அது விரைவாக, துரிதமாக நடைமுறைக்கு வரும் என்று கூறி இருந்தார்கள்.

ஆனால் ஒரு வருடமாகியும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கூறியிருந்தோம். அவர், அடுத்த ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவை ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார்.

அதைச் சுட்டிக்காட்டினோம். அந்த உறுதிமொழியில் ஐம்பது வீதம் நடைமுறைப்படுத்தி விட்டோம், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி விட்டோம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எங்களுக்கு இன்னும் சொற்ப காலம் தேவைப்படுவதாக அவர் கூறினார். ஆனால் நடத்துவோம் என்ற உறுதிமொழியை அவர் தந்தார்.

எனினும் எப்போது என்று அவர் சொல்லவில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறித்து எடுக்கப்படக்கூடாது, பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்கள் பற்றி எல்லாம் எடுத்துரைத்தோம். எங்கள் மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பிரச்சினைகள் பற்றி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள்.

புதிய அரசமைப்பு பொறிமுறை ஜனவரியில் ஆரம்பம் ; சுமந்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு | Solution Finding Mechanism Will Begin President

அந்த விடயங்களை எல்லாம் அவர் செவிமடுத்தார். எங்களோடு பேசினார். முக்கியமான பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற முறையில் தொடர்ந்து இந்த விடயங்களை எங்களுடன் கலந்துரையாடி முன்னெடுப்பார் என அவர் உறுதியளித்திருக்கின்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். குறிப்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் என்ற சொற்றொடர் இருப்பதை நான் அவருக்கே சுட்டிக்காட்டினேன்.

அப்படிக் குறிப்பிட்டிருக்கையில் நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சர்கள், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று பேசி இருக்கின்றார்கள். அதையும் நான் அவருக்குச் சுட்டிக்காட்டினேன். அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'அரசியல் கைதிகள்' என்று குறிப்பிடப்பட்ருப்பதை அவருக்குப் படித்தும் காட்டினேன்.

எட்டுப் பேர்தான் அப்படி இருக்கின்றார்கள். அவர்கள் நீண்ட காலம் இருக்கின்றார்கள். அதனைச் சுட்டிக்காட்டினேன். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்கள் குற்றவாளிகளாக கண்ட முறைமையே தவறு. அத்தோடு அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்கின்றார்கள்.

இவற்றைக் கவனத்தில் எடுத்து அவர்களை விரைந்து விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றோம். அது குறித்துத் தான் அவதானம் செலுத்துவார் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் பற்றி நாங்கள் சுட்டிக்காட்டினோம். அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது.

அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக் குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு இருந்த போது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக, புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது.

தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெயிட்ட தகவல்

தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெயிட்ட தகவல்

ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்பதை அவருக்கு நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். இதை வைத்து இனவாதத்தைக் கிளப்புவதற்கு எல்லா பக்கத்திலும் ஆள்கள் இருக்கின்றார்கள். பிக்குமார் சிலர் இங்கிருந்து அங்கு சென்று இதனை ஊதிப் பெருப்பிக்க நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றோம்.

அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது எங்களது திடமான கருத்து. அதேவேளை எங்களுடைய மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தேவையில்லாமல் அப்படி விகாரைகளை அமைப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டினோம். உதாரணத்துக்கு திரியாயில் இரண்டே இரண்டு பௌத்தர்கள்தான் இருக்கின்றார்கள்.

அங்கு இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக் கட்டப்படுகின்றன.

பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் காட்டுவதற்காக அப்படிச் செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினோம்." - என்றார்.

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US