கண் முதல் பல் வரை காக்கும்.... பூசணி பூவுக்குள் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக பூசணிக்காயில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது . இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் நமக்கு நிறைய ஊட்ட சத்துக்களை வழங்கும் .
நாம் பூசணிக்காய்களை அடிக்கடி பயன்படுத்துவோம், ஆனால் பூசணிக்காயை போலவே அதன் பூவிலும் நிறைய ஆரோக்கிய நனமைகள் ஒளிந்துள்ளன. பூசணி போலவே பூசணி விதைகள் மற்றும் பூக்களும் நமக்கு நிறைய மருத்துவ நன்மைகளை அளிக்கும் .
என்னென்ன நன்மைகள்
1.பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் இந்த பூ சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வராமல் காக்கிறது .
2.பூசணி பூக்களில் ஏராளமான வைட்டமின் A காணப்படுகின்றன. இது , பலவீனமான கண் பார்வையை மேம்படுத்துகிறது. பூசணி பூக்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான விழித்திரையை பெற்று நல்ல பார்வை சக்தியை பெறலாம்
3. நம் உடலில் நோய் வராமலிருக்க இம்மியூனிட்டி பவர் அவசியம் .இந்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பூசணிப் பூக்களை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4.பூசணிப் பூக்களில் நார்ச்சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதை சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்,, எனவே உடல் எடையும் கட்டுப்படும்.மலசிக்கல் தீரும்
5. பூசணி பூக்களில் போதுமான அளவில் பாஸ்பரஸ் கால்சியம் காணப்படுகிறது. இதனால் இது பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாக்கிறது.
6.பூசணி பூக்கள் ஈறுகள் மற்றும் பல் இனாமல் கெடாமல் காக்கிறது . பூசணி பூக்களை உட்கொள்வது எலும்பு தேய்மானம் அல்லது தாது சத்து இழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது