விளையாட்டில் சேர்க்க மறுத்த சிறுவனின் பல் பறிபோனது
களுத்துறையில் பயாகலை - துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
துவகொட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த சிறுவன் கடந்த 09 ஆம் திகதி அன்று தனது வீட்டிற்கு அருகில் சிறுவன் ஒருவனுடன் இணைந்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனை அவதானித்த மற்றுமொரு சிறுவன் தன்னை விளையாட்டில் சேர்க்குமாறு 14 வயதுடைய சிறுவனிடம் கேட்டுள்ளார். ஆனால் காயமடைந்த சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததனால் கோபமடைந்த அந்த சிறுவன் 14 வயதுடைய சிறுவளை தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காயமடைந்த சிறுவனின் தாய் இது தொடர்பில் பயாகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தாக்குதலில் சிறுவனின் இரண்டு பற்கள் உடைந்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பயாகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.