வெள்ளிக்கிழமையில் கல் உப்பு; உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் !
வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் செய்யும் பரிகாரம் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. பசுவும், வெண் புறாக்களும், சில உணவுப்பொருட்களும், வாசனை பொருட்களும் செல்வத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
செல்வத்தை கொடுக்கும் குபேரனை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதாவது தினசரியும் ஹோரை பார்த்து செய்யும் காரியம் வெற்றியை கொடுக்கும்.
ஹோரை நேர பூஜைகளும் வழிபாடுகளும்
குறிப்பிட்ட ஹோரையில் செய்யும் நற்காரியங்கள் வெற்றியை தரும். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் பூஜைகளும் வழிபாடுகளும் மேற்கொண்டால், நற்பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்று சொல்கிறோம்.
எனவே, சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில், சுக்கிர ஹோரை நேரத்தில், நாம் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் நமக்கு அதிக நன்மைகளை கொடுக்கும். வெள்ளிக்கிழமையில் காலை 6 மணிக்கு சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும். இதையடுத்து மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணி வரைக்கும் சுக்கிர ஹோரை.
மதியத்தில் விளக்கேற்றினால் மும்மடங்கு பலன்
இதன்பின்னர், இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை. மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணிக்குள், விளக்கேற்றி நம்முடைய பிரார்த்தனைகளைச் செய்வது அதிக மகத்துவம் கொண்டது. காலையில் விளக்கேற்றினாலும் மதியத்தில் விளக்கேற்றி வழிபடுவதற்கு மும்மடங்கு பலன்கள் உள்ளன.
அதேபோல், வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை நேரமான இரவு 8 மணி முதல் 9 மணி பூஜை அறையில் அமர்ந்து நமக்கு என்ன தேவையோ அதை வேண்டி பிரார்த்தனை செய்தால், எண்ணியது நடக்கும் என்பது ஐதீகம்.
முக்கியமாக, கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், கடன் கொடுத்துவிட்டு, திரும்பி வரவில்லையே என்று கலங்குபவர்கள், தொழிலில் லாபம் வரவேண்டுமே என்று எதிர்பார்ப்பவர்கள், வியாபாரம் விருத்தி அடையாமல் தேக்கநிலையில் இருக்கிறதே என கைபிசைந்து வருந்துபவர்கள், வெள்ளிக்கிழமையன்று, சுக்கிர ஹோரையில் பூஜையறையில் விளக்கேற்றி மகாலட்சுமியிடமும் பெருமாளிடமும் வேண்டிக்கொண்டால் கடன் பிரச்சினை நீங்கும்.கொடுத்த கடன் வசூலாகும்.
கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம்
கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. பாற்கடலில் இருந்துதான் மகாலட்சுமி தோன்றினார். எனவே வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரை நேரத்தில் கல் உப்பு வாங்குவது செல்வ வளத்தை அதிகரிக்கும்.
கல் உப்பு வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்கி ஒரு டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைக்கலாம். தவறியும் கூட சனிக்கிழமை உப்பு வாங்கக் கூடாது.
சனிக்கிழமை உப்பு வாங்ககூடாது
அப்படி சனிக்கிழமை உப்பு வாங்கினால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வாங்கிக் கொடுக்க நமக்கு வருமானம் அதிகரிக்கும். பச்சைவளையலை வாங்கி பெருமாள் கோவிலில் தாயாருக்கு கொடுக்க பணம் வரும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும்.
நம்பிக்கையோடு 24 வெள்ளிக்கிழமை பசும்பால் ஊற்றி வர நிச்சயமாக வருமானம் அதிகரிக்குமாம்.