ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் ; வைரலாகும் போஸ்ட்
குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போஸ்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால், தான், தன்னுடைய யூடியூப் சனலை மூடி விடுவதாக, சுதத் திலக்கசிறி தன்னுடைய யூடியூப் செனலில், நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்திருந்தார்.
அதேவேளை இந்தப் பின்னணியில், ஒரு யூடியூபர் கணித்தபடி அவர் கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுவார் என்பதை யூடியூபருக்கு எவ்வாறு முன்னரே தெரியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.