கைதான ரணிலை காண ஓடோடி வந்த நாமல் ராஜபக்க்ஷ!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது சம்பவம் தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதிமன்றில் குவிந்த அரசியல்வாதிகள்
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சிசிடிக்கு வாக்குமூலம் வழங்க சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ரணிலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அலைத்து வந்த நிலையில், அவர் வரும் முன்பே ரணிலில் ஆதவார்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் நீதிமன்ற வளகாத்தில் குவிந்ததனால் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரணிலுக்கு பிணைவழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.