சிறுபோக நெல் கொள்முதல் தீவிரம் ; 5,390 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு
இந்த ஆண்டு சிறுபோக பருவத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கையின் கீழ், நெல் சந்தை சபையினால் இதுவரை 5,390 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்முதல் நடவடிக்கையின் மூலம் இந்த அளவு நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தை சபையின் பிரதி பொது மேலாளர் சமன் பாலித பண்டார தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3,148 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெட்ரிக் தொன்னும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெட்ரிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நெல் அறுவடைக்கு ஏற்ப எதிர்காலத்தில் நாடு முழுவதும் 148 நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தை சபை தெரிவித்துள்ளது.