கந்தசஷ்டி விரதம்; சந்நிதியான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!
தமிழர் கடவுளாம் முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரததத்தை முன்னிட்டு வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம் இன்று ஆரம்பமான நிலையில் தாயகத்தில் உள்ள ஆலயங்களின் கந்தசஷ்டி விரத வழிபாடுகள் மிகவும் கோலாகலமாக இட்ம்பெறுவது வழமை.
முருகப்பெருமானை மனமுருகி வழிபாடு
பக்தர்கள் பக்தி சிரத்தையுன் ஆயலங்களுக்கு சென்று முருகப்பெருமானை மனமுருகி வழிபாடு செய்து வருகின்றனர். 6 நாட்களும் உபவாசமிருந்து முருக கடவுளை பக்தர்கள் வழிபடுவார்கள்.
அந்தவகையில் இன்று (2) ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் 7 ஆம் திகதி சூரன்போருடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், செல்வச் சந்நிதியான் ஆலயம் , மாவட்டபுரம் கந்த சுவாமி ஆலயம் பல ஆலயங்களிலும் கந்தசஷ்டி விரதம் கோலாகலமாக கொண்டாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.