ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் நான் இணையவில்லை! எம்.பி வெளியிட்ட தகவல்
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle) இணையவில்லை என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று முற்பகல் அறிவித்தது.
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் சேரவில்லை என்று இன்று பிற்பகல் தெரிவித்தது.
இதேவேளை, "கூட்டு எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமே ஒப்பந்தம், நான் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் சேரவில்லை" என்று அவர் முகநூலில் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்
சஜித் அணிக்கு தாவிய மொட்டு கட்சி எம்.பிக்கள்!
