விநாயகரை நீரில் கரைக்க சென்ற 6 சிறுவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் பரபரப்பு
கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு அருகில் உள்ள பெத்தகஞ்சர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட சிலைகளை 8 மாணவர்கள் குளத்தில் கரைக்க சென்றிருக்கிறார்கள்.
செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டதால் ஏரி மற்றும் குளத்தில் ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன.
அந்த ஆழம் தெரியாமல் விநாயகர் சிலை கரைக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பி ஓடி வந்து ஆசிரம ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பின் நீரில் மூழ்கி மரணமடைந்த ஆறு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.