மாணவர்களுக்காக இன்று முதல் சிசு செரிய சேவை!
பாடசாலை மாணவர்களுக்காக இன்று முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு சிக்கலும் இன்றி, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குத் தேவையான பஸ் சேவைகளை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
இதனிடையே, இன்று முதல் 90 தொடக்கம் 95 வீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை , பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ சில்வா கூறியுள்ளார்.