சின்ன வெங்காயத்தில் இருக்கும் பெரிய நன்மைகள்
அளவில் சிறிதாக இருந்தாலும் அள்ளி தரும் மருந்துங்களை கொண்ட இந்த சின்ன வெங்காயத்தில் இத்தனை நன்மைகள் உள்ளதென அறியாத நன்மைகள் பற்றி நான் இங்கு பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்ததால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு வழங்கும்
இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. அதேபோல் புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் கொண்டது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.