இராமநாதன் அர்ச்சுனா எம்பி அதிரடியாக கைது
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக இராமநாதன் அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து , அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்தது.