வவுனியாவில் யுவதியை சுட்டுக்கொன்றவருக்கு இப்படி ஒரு நிலை!
வவுனியா, நெடுங்கேணியில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதான சத்தியகலா என்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.
பெண்ணின் மைத்துனரான சிவகுமார் என்பவரே, தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்த போதும், சத்திகலா அதற்கு உடன்படவில்லை. இது தொடர்பில் யுவதி நெடுங்கேணி பொலிசாரிடமும் முறையிட்டிருந்த நிலையில், சத்தியகலாவை சுட்டுக் கொலை செய்ததும் அங்கிருந்து தப்பி, தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெடுங்கேணி பொலிசார், அப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மறைந்திருந்த சிவகுமாரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது அவர் நஞ்சு அருந்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக நோயாளர் காவு மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை , சிவகுமார் மறைந்து இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.