வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம்

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation Gun Shooting
By Sahana Dec 27, 2025 08:54 PM GMT
Report

அம்பலாங்கொடை வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து இக்கொலையைத் திட்டமிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இசையால் தலைமுறைகளை இணைத்த லதா வல்பொல காலமானார்

இசையால் தலைமுறைகளை இணைத்த லதா வல்பொல காலமானார்

குறித்த வீடு கண்டி, அன்கும்பர பகுதியில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் குழுவினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொட நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றின் முகாமையாளர் வர்த்தக நிலையத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அண்மையில் கிரிபத்கொட மற்றும் மாகொல பகுதிகளில் இருவரைக் கைது செய்தனர்.

வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம் | Shopping Mall Manager Shot Dead New Twist Police

துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைச் ஏற்படுத்திக் கொடுத்தமை மற்றும் அவர்களை ஒருங்கிணைத்தமை போன்ற செயற்பாடுகளை தாமே மேற்கொண்டதாக அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் 'கரந்தெனிய சுத்தா' என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய விசாரணையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கொலைக்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கிய பெண்ணும் அடங்குவார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஆகியவற்றுடன் அவர் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கண்டியில் உள்ள குறித்த சொகுசு வீட்டில் கடந்த 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. ​

வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக் கொலை ; விசாரணையில் வெளியான புதிய திருப்பம் | Shopping Mall Manager Shot Dead New Twist Police

டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொடவிற்குச் சென்று குற்றத்தைச் செய்துவிட்டு, மீண்டும் இருவரும் அதே சொகுசு வீட்டிற்கே தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது அவர்கள் அங்கிருந்து ஏற்கனவே தப்பிச் சென்றிருந்தனர்.

இக்கொலையை கொஸ்கொட சுஜீ, கொத அசங்க, கரந்தெனிய சுத்தா, அவரது தம்பியான கரந்தெனிய ராஜு, தொல மற்றும் தசுன் மானவடு ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகள் அனைவரும் இணைந்து செய்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

கொலையுண்ட கோசல என்பவர், கொஸ்கொட சுஜீயின் பிரதான எதிரியான 'ஊரகஹ மைக்கல்' என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதே இக்கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 35 அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

இலங்கையின் 35 அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US