இலங்கையின் 35 அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தைச் சேர்ந்த (National Audit Office) 35 அதிகாரிகளுக்கான விசேட திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் இந்தியாவிஇ இடம்பெறவுள்ளது.
இந்த பயிற்சி திட்டம் நொய்டாவிலுள்ள தகவல் முறைமைகள் மற்றும் கணக்காய்வுக்கான சர்வதேச மையத்தில் (iCISA) டிசம்பர் 08 முதல் 19 வரை நடைபெற்றது.

ஆண்டுதோறும் 700 விசேட பயிற்சி
தகவல் முறைமைகள் மற்றும் கணக்காய்வுக்கான சர்வதேச மையமானது உயர்தர கணக்காய்வுப் பயிற்சி மற்றும் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்ப (IT) கணக்காய்வு நடைமுறைகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாகும்.
அதேவேளை இதுவரை 154 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இவ் மையம் பயிற்சியளித்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட இந்தப் பயிற்சி திட்டம் இரண்டு வாரங்கள் நடைபெற்றது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான திறன் மேம்பாட்டுத் துறையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, இலங்கையின் தொழில் வல்லுநர்களுக்காக ஆண்டுதோறும் 700 விசேட பயிற்சிகளை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.