வவுனியாவில் பயங்கரம்; பணியாளரை கத்தியால் குத்திய முதலாளி
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
பல இடங்களில் கத்திக்குத்து
இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கிஇருந்துள்ளார். இந்நிலையில், உரிமையாளருக்கும், பணியாற்றும் இளைஞனுக்கும் இடையில் நேற்று (13) அதிகாலை ஏற்பட்ட முரண்பட்டுளது.
இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.