கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
கொமும்பு பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (3) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பொலிஸாரின் தகவலின்படி, சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர்.
எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியை தொடர்ந்து செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, முச்சக்கர வண்டியை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர் முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.