சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
இலங்கை கடற்படையும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீ லங்கா கடற்படை கப்பலான ரங்கலவின் அதிகாரிகளும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கடந்த (01) ஆம் திகதி வெல்லம்பிட்டியில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இச்சோதனையின் போது சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகள் 130 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், கார் மற்றும் சட்டவிரோத சிகரெட் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.