பெண்ணுக்காக நடந்த மோதல் ; புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு
புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (30) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர் பாவட்டாமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர், பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருந்ததாகவும், விசாரணையில் அந்த பெண்ணுடன் தொடர்புடைய மற்றொரு நபர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.