பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரம்; காணாமல்போன தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு
பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்று படகில் ஏறி பராக்கிரம சமுத்திரத்தில் நீராடச் சென்றுள்ளனர்.
படகு கவிழ்ந்ததில், அந்த நேரத்தில் படகில் 9 பேர் பயணம் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரும் அவரது 38 வயது மகனும் ஆவர்.
இறந்தவர்களின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (12) நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.