நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ; சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,545.9 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.53 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், இந்த சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் ஆகியவையே தங்கம், வெள்ளியின் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.