தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு ; மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு இல்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பும் கிடைக்கவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உபாலி பன்னிலகே வெளியிட்ட, மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக இந்த வகை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான அழைப்புகள் ஜனாதிபதி செயலகம் அல்லது பாதுகாப்பு அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படுவது நடைமுறையாகும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
யுத்த வெற்றியின் 17 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நாளை நடைபெறவுள்ளது.