குளியாப்பிட்டி இளைஞன் கொலையில் திடுக்கிடும் தகவல்
குளியாப்பிட்டியில் கொலை செய்யப்பட்டு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் திடுக்குடும் தகவல்கள் வெ:ளியாகியுள்ளன. காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் காதலியின் தந்தை கூற்றுப்படி, இந்த கொலை மகளுக்காக தந்தையின் பாசத்தினால் நடந்ததாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை வெளியிட்ட தகவல்படி,
17 வயது யுவதியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுப்பு
தனது மகளுக்கு 17 வயது எனவும் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் , உயிரிழந்த 31 வயதுடைய இளைஞன் அவளை கர்ப்பமாக்கினார் என தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முதலில், அவரைக் கொல்ல நினைக்கவில்லை , தன் மகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை என்பதால், தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கில், இது குறித்து ஆலோசிக்க அழைத்து வந்தபோது, தொடர்ந்து மகளை ஏற்க மறுத்ததால், தகராறு ஏற்பட்டு கொலையாக மாறியது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யுவதியின் தந்தை நேற்று(10) நீதிமன்றத்தில் ஜாமீன் இழந்து மீண்டும் ரிமாண்ட் சிறைக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் மகள் 52 முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும், ஊடகங்கள் ஏன் இதைப் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறு பெண்ணுடன் தொடர்பு
இந்த பிரச்சனையால் தனது வீடு எரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது மகளின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் , ஊடகங்களில் தம்மைப் பற்றி பேசுவது மட்டுமன்றி தமது பிரச்சினைகளையும் வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் மாமாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் கொலைக்குக் காரணமான உண்மை குறித்து முன்னதாகவே தெரியவந்தது.
குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த இளைஞன் இறக்கும் போது 31 வயதுடையவர் என்பதுடன் இளைஞன் முன்னரே திருமணமானவர் எனவும், தற்போது அந்த திருமணத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே சமயம் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் , அந்தப் பெண்ணும் கருவுற்ற பிறகு கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இதேவேளை, கொல்லப்பட்ட சுசித் ஜயவன்சவுடன் காதல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 வயதுடைய சிறுமியும் , இரண்டு சிறிய சகோதரர்கள் குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர் .