மகிந்த வெளியேறும் முன் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் ; கதறி அழுத பெண்
இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம வீட்டிலிருந்து வெளியேறும் போது, அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
எனினும், அவருக்காக எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் சேரவில்லை என கூறபடுகின்றது.
எங்கள் அரசருக்கு அநியாயம்....
இதன் போது அங்கிருந்த மகிந்தவின் ஆதரவாளர்கள் எங்கள் அரசருக்கு அநியாயம் இழைக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யுத்தத்தை முடித்த தலைவருக்கு அநீதி இழைத்து விட்டதாகவும் மகிந்தவின் ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்த செயல் மிகவும் மோசமானது எனவும், எங்கு சென்றாலும் ராஜா ராஜாதான் என்றும் கோஷமிட்டுள்ளனர்.
அத்துடன், மகிந்தவை புகைப்படம் எடுக்க வேண்டாம் என அவரின் ஆதரவாளரான ஒரு பெண், ஊடகவியலாளர்களிடம் முரண்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார். பெண்கள் கதறி அழுததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.