வீட்டை விட்டு வெளியேறிய மகிந்த ; நாமல் வெளியிட்ட உருக்கமான பதிவு
தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து செய்யப்படும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று வெளியேறியிருந்தார்.
எக்ஸ் தள பதிவு
இது குறித்து நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இன்று, என் தந்தை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்புகிறார், இது அனைத்தும் தொடங்கிய இடம். உண்மையான பலம் நமது வேர்களிலிருந்து வருகிறது, பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து அல்ல என்பதை நினைவூட்டுகிறது.” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2 வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதன் விளைவாகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் மீண்டும் கையளிக்க வேண்டியிருந்தது.