வீடொன்றுக்குள் இளைஞன் அரங்கேற்றிய சம்பவம் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
மாதிவெல, மங்கள மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான போதைப்பொருட்களுடன் நேற்று (6) இரவு இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதிவெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் தொகையைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்போது 3 கிலோ 649 கிராம் ஹெரோயின், 2 கிலோ 109 கிராம் ஐஸ் மற்றும் 558 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மாதிவெல, கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.