மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு ; நீதிமன்றம் திறந்த தீர்ப்பு

Sri Lanka Police Galle Sri Lanka Railways Death Court of Appeal of Sri Lanka
By Sahana Nov 06, 2026 10:41 PM GMT
Report

காலி – கிந்தோட்டை பகுதியில் புகையிரதப் பாதைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில், மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் திறந்த தீர்ப்பு (Open Verdict) வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு

காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் கல்வி பயின்று வந்த ஒலொக்குவ பட்டபெந்திகே கவிந்தி யுத்மினி டி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலி திடீர் மரண விசாரணை அதிகாரி காமினி குலசிங்க, மருத்துவ அறிக்கைகள் மற்றும் விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு ; நீதிமன்றம் திறந்த தீர்ப்பு | Persists Death Medical Student Court Open Verdict

மாணவியின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட செயற்பாட்டின் விளைவா என்பது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பத்தினரின் சாட்சியங்கள்

மரண விசாரணையின்போது சாட்சியமளித்த மாணவியின் தந்தை, தனது மகள் மூன்றாவது முயற்சியில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகி மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த விஷ்மித விஷாரத விஜயநாயக்க என்பவரை கடந்த ஓகஸ்ட் மாதம் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் பாரிய முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை என்றும் தந்தை சாட்சியமளித்துள்ளார். எனினும், கல்விச் சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிது காலம் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் மாணவி உறவினர்களிடம் தெரிவித்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு ; நீதிமன்றம் திறந்த தீர்ப்பு | Persists Death Medical Student Court Open Verdict

அவருக்கு குடும்பத்தினர் ஆதரவளிக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் திகதி கிந்தோட்டை பகுதியில் நடைபெற்ற சமூக சுகாதாரத் திட்டமொன்றில் பங்கேற்ற பின்னர், மாணவி மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் அவரைச் சந்தித்த கணவரிடமும் தனிமையில் இருக்க விரும்புவதாக மாணவி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அன்றைய மாலை தனது கணவர் மற்றும் பெற்றோருக்கு மாணவி குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அவற்றைப் பார்த்த குடும்பத்தினர் கவலையடைந்து அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மறுநாள் அதிகாலை மாணவியின் தந்தை மருத்துவ பீட விடுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு மகளைக் காண முடியாத நிலையில், அவரது நண்பர்களிடமும் விசாரித்துள்ளார். எனினும், மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவி விடுதியில் இல்லை என்ற தகவலை அறிந்த அவரது கணவரும் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.

நவம்பர் 3ஆம் திகதி காலை புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் மாணவியின் சடலத்தைக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

மரண விசாரணையின்போது, மாணவியின் உடலில் புகையிரதம் மோதியதால் ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடிய காலப்பகுதியில் அந்தப் பாதையில் பயணித்த இரண்டு புகையிரதங்களின் சாரதிகளும் இவ்வாறான சம்பவம் எதனையும் அவதானிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு ; நீதிமன்றம் திறந்த தீர்ப்பு | Persists Death Medical Student Court Open Verdict

இதனால், மாணவி மீது மோதிய புகையிரதம் எது என்பதையும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதையும் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்துடன், தனது மகளின் மரணத்தில் மற்றொரு நபருக்குத் தொடர்பு இருப்பதாகத் தாம் சந்தேகிக்கவில்லை என மாணவியின் தந்தை மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் எச்.டி. வீரரத்னவின் மருத்துவ அறிக்கைகளும் மரண விசாரணையின்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

எனினும், மரணத்திற்கான சூழ்நிலைகளையும் காரணத்தையும் உறுதிப்படுத்தப் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகையிரத நிலைய அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் மேலதிக தகவல்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் முடிவுகள் மூலம் மாணவியின் மரணம் தொடர்பான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர், கணவர் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்து அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை, மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.

மணல் டிப்பருடன் கார் மோதி விபத்து ; பொலன்னறுவை அறுவை சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு

மணல் டிப்பருடன் கார் மோதி விபத்து ; பொலன்னறுவை அறுவை சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US