புதுமணபெண்ணின் கைவரிசை ; திருமணமாகி இரு தினங்களில் கணவனுக்கு காத்திருந்த பேரிடி
திருச்செந்தூரில் திருமணம் முடிந்து 2 நாட்களின் பின் தங்கத் தாலி மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவான இளம் பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் என்று கூறிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

திருமண படங்கள்
தொடர்ந்து தான் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு இளம் பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
திருமணமாகி இரு தினங்களின் பின் கணவன் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம் புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை.
அப்போதுதான் மனைவி கட்டிய தாலி, வீட்டில் இருந்த பணம் மற்றும் துணிகளுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.இளைஞரின் செல்போனில் திருமணக் கோலத்தில் எடுத்துக் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களையும் அழித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.