பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; வேட்டை தீவிரம், மரண தண்டனை நிச்சயம்
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட் ஆகியவற்றை விற்பனை செய்வது போன்று, 'மாவா' 'பாபுல்' போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுகிறது.

மரண தண்டனை
இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இது தொடர்பில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொக்கெய்ன், ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
தமது நெருங்கியவர்கள் இந்த போதைப்பொருள் அபாயத்திற்கு பலியாவதற்கு முன்னர், தமது பிரதேசங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது குறித்து தகவல் வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என மேலும் தெரிவித்தார்.