கொழும்பு வைத்தியசாலையில் உதவியாளரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சி
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் சோதனை
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மருதானை பொலிஸார் நடத்திய விசாரணையில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை உதவியாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வெள்ளைப் பொடி அடங்கிய பொதியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபர் மீதான வெறுப்பு காரணமாக யாராவது இந்த தோட்டாக்களை மோட்டார் சைக்கிளின் வைத்தனரா அல்லது அவர் தோட்டாக்களை கொண்டு வந்தாரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.