ஹோர்முஸ் நீரிணையை நெருங்கி வரும் கப்பல்கள் குறிவைக்கப்படும் ; ஈரானின் மிரளவிடும் அறிவிப்பு
ஈரானில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஈரானிய துறைமுகங்கள் மீது முற்றுகை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடலில் நங்கூரமிட்டுள்ள இடத்திலிருந்து எந்த கப்பலும் நகரக்கூடாது, இந்த உத்தரவை மீறும் எந்தவொரு கப்பலும் குறிவைக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
அந்த நீரிணை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு “நம்பகத்தன்மை இல்லை” என்று IRGC கூறியுள்ளது.
அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை நிறுத்தும் வரை அந்த நீர்வழிப்பாதை மீண்டும் மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.