பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்ற மையத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் கூடாரத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான பொலிஸ் கான்ஸ்டபிள் அதிவேக நெடுஞ்சாலை சுற்றுலா பிரிவின் கொட்டாவ பரிமாற்ற பிரிவில் கடமையில் இருந்தார்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் , ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பெண்னின் முறைப்பட்டை அடுத்து , ஹோமாகம பொலிஸார் சிறப்பு பொலிஸ் குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கி பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான அறிக்கை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் ஒழுங்கீனமான நடத்தை காரணமாக அவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.