உதவி செய்வது போல் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பல்லடம் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத் தம்பதியருக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த ராமகிருஷ்ண மோண்டல் என்ற வடமாநிலத் தொழிலாளி, பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மயக்கம் தெளிந்த பெண், அங்கிருந்து தப்பிச் சென்று வீட்டை அடைந்துள்ளார். பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தம்பதியினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவிநாசிப்பாளையம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ண மோண்டலைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.