தமிழர் பகுதியில் பரீட்சை இடைவேளையில் கடுமையாக மோதிக்கொண்ட மாணவர்கள்!
வவுனியா நகரப் பகுதியில் இரண்டு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் (10-05-2024) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம் குறித்த பரீட்சை நிலையத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது.
இந்த நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்றுகூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது.
இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் குறித்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.