திடீரென விசித்திரமாக நடந்து கொண்ட பாடசாலை மாணவிகள்!
இந்தியாவின் உத்தர காண்ட மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் மாணவிகள் திடீரென விசித்திரமாக நடந்து கொண்டுள்ளனர்.
இந்த பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் சத்தமாக அழுது தலை குனிந்து பயங்கரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியை விமலா தேவி கூறுகையில்,
"எங்கள் பள்ளியில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள் அவர்கள் சத்தமாக அழுவது கூச்சலிடுவது மற்றும் வியர்த்து கொட்டுவது மற்றும் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இதை கண்டு நாங்கள் பயந்தோம் மாணவிகளின் பெற்றோரிடம் தெரிவித்தோம்.
அவர்கள் ஒரு பூசாரியை அழைத்து வந்து மந்திரம் சொன்னார்கள் அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது தற்போது அதிகளவில் குழந்தைகள் அப்படி நடந்து கொள்ள்கின்றனர் " என கூறியுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தின் பின்னனி எதுவும் வெளியாகாத நிலையில் அது குறித்து மாநில அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.