சிஐடியில் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சந்திரகாந்தன்!
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையாகியிருந்தார்.
சிவநேசதுரை சந்திரகாந்தனிடம், சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2வது நாளாகவும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் நடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளித் தொகுப்பு ஒன்றில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ் விடயம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.