சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது
சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார்.

இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளார். இங்கு அக்டோபர் 09 ஆம் திகதி வரை இருப்பார். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குஙம்.

மிதுனம்
சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

கன்னி
சனி நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்
சனி நட்சத்திர பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதுவும் இந்த மாற்றமானது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நல்ல நிதி முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
