சனிபகவானின் கோபத்தால் 2026-ல் ஆபத்துகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார்.2026 ஆம் ஆண்டு சனிபகவானின் ராசியில் எந்த மாற்றங்களும் இல்லையென்றாலும் சனிபகவானால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

எந்தெந்த ராசிக்காரர்கள் சனிபகவானால் 2026-ல் சனிபகவனால் பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026-ல் மோசமான பலன்களை அளிக்கப்போகிறார். இதன் விளைவாக, அவர்கள் பல மோசமான சவால்களைச் சந்திக்க நேரிடும். இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும். நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது. அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

துலாம்
சனிபகவான் தனது பொற்பாதங்களால் துலாம் ராசியையும் 2026-ல் ஆட்சி செய்கிறார். எனவே 2026-ல் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் நிதி நிலைமை கணிசமாக மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தையில், இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத கெட்ட செய்திகள் திடீரென தேடிவரும். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 2026-ல் மோசமான பலன்களை தரப்போகிறார். இந்த ஆண்டில் உங்கள் சிந்தனைகள் எதிர்மறையாக மாறக்கூடும். உங்கள் தன்னம்பிக்கை வெகுவாகக் குறையலாம். தேவையற்ற அச்சங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த காலகட்டத்தில், அவர்களின் பேச்சு மிகவும் கடுமையானதாக மாறலாம், இது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் அரசு அல்லது சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
திடீர் திருட்டு, நிதி இழப்பு அல்லது நெருப்பு தொடர்பான விபத்துகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் வாய், பற்கள், கண்கள் அல்லது வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் பெரிய பிரச்சினையாக மாறலாம். இந்த காலகட்டத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம்.
