பலாலி கணிவிடுவிப்பு போராட்டம்; ஐவர் மீது பாய்ந்த வழக்கு!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Protest
By Sulokshi Aug 18, 2026 04:52 AM GMT
Report

  வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பலாலி கணிவிடுவிப்பு போராட்டம்; ஐவர் மீது பாய்ந்த வழக்கு! | Palaly Land Release Protest Case Filed Police

 வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு

காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பலாலி பிரதான வீதியின் T சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 ஐவர் கைது

காஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 ஐவர் கைது

இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு

அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US