சனி பகவான் ஆசியால் நல்ல அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அக்டோபர் 09 ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்த நட்சத்திரத்தில் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை, சுமார் 118 நாட்களுக்கு இருப்பார். சனி பகவானின் இந்த நிலையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் 2027 பிப்ரவரி வரை நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் அனைத்தும் இக்காலத்தில் கிடைக்கும்.

மிதுனம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குறிப்பாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமான வேலைகள் இதுவரை தடைபட்டு வந்தால், சனி பகவானின் அருளால் அந்த தடைகள் நீங்கி, நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும். இருந்தாலும் இக்காலத்தில் எந்த ஒரு பெரிய முடிவை எடுப்பதாக இருந்தாலும், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்
