உயர்தர மாணவர்களுக்கான GIT பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களில் திருத்தம்
2026 பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களில் (Admission Cards) தகவல்களைத் திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிப்பதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பெயர், பரீட்சை மொழிமூலம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விபரங்களைத் திருத்துவதற்காக முன்னர் 2026 ஒக்டோபர் 19 நள்ளிரவு வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், 2026 ஒக்டோபர் 21 பிற்பகல் 4:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2027 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 12 மாணவர்களுக்காக முதன்முறையாக நடாத்தப்படும் இந்தப் பரீட்சை, 2026 ஒக்டோபர் 24 அன்று நாடுமுழுவதிலுமுள்ள 1,520 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பரீட்சார்த்திகளும் 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகத் தங்களது அனுமதிப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், புதிதாக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 0112784208 / 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளலாம்.