தரமற்ற உரம் விநியோகம்? ; ஆய்வில் தேசிய உர செயலகம்
அனுராதபுரம் தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய MOP உரத்தின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.
இந்த உரம் விவசாயப் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு, ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் மஹ கனதராவ பிரதேசத்தில் உள்ள ரம்பேவ விவசாய சேவை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டு காபயபுர விவசாயிகளுக்கு, 2019ஆம் ஆண்டில் மானியமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உரத் தொகுதி ஒன்று தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளதாக நேற்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின்படி, தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த MOP உரம், 2019ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மற்றும் காலாவதியான உரமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.